Thursday, June 23, 2011

வாழ விடுங்கள்

வெளிநாடுகளில் இருந்துface book இல்

வீரம் பேசுபவர்களே

உங்களுக்காய் வீர மரணம் அடைந்தவர்களின்
குடும்பத்தினையும்
உங்களின் வீர வசனத்தை

வேத வசனமாகக் கொண்டு

போராடிய வீரர்களையும்
இனியாவது வாழ விடுங்கள்.!!!!!!!
 
நீங்கள் கொக்கரிக்கும் கருத்துக்களும்

கூற எத்தனிக்கும் நியாயங்களும்

எம் வீரர்களின்

காயங்களுக்கு மருந்தாகுமா?

அவர்களின் பசிக்கு விருந்தாகுமா?


இங்கு அவர்கள் பலருக்காய் போரில்
நீங்கள் அங்கு யாருக்காய் bar இல்?


வெளிநாடுகளில்...........

பயங்கரவாதிகள்....
ஆமாம் ,
அவர்கள் மிகவும்
பயங்கர --வாதிகள்..........

என்றுபச்சை பச்சையாக

பொய் புளுகி...

பச்சை மஞ்சள் என்று

வர்ண அட்டைகளைப்

பெற்றுக் கொண்டு...........

face book இல்

சிவப்பும் மஞ்சளும்கொடிகள்..........

உங்களுக்கு.......

பச்சை பச்சையாய் பேசுவதை தவிர

என்ன செய்வது?
 
அங்கு நீங்கள்
இனம் தெரியாதஒருவருடன் ஓர் அறையில்........
இங்குஇவர்கள்
இன்னும் இருட்டறையில்.........
 
நீங்கள் on line ,off lineஎன்று line
அடித்துக்கொண்டு இருக்கிறீர்கள்....

அவர்கள் தன் line என்ன என்று
தெரியாமல் தத்தளித்துக்கொண்டுஇருக்கிறார்கள்.
 
அவர்களுக்கு உதவி செய்யுங்கள்

என்று கூறவில்லை

உபத்திரவம் செய்யாதீர்கள்

என்று சொல்லியுமாபுரியவில்லை............
 
அவன் எங்களுக்கு சொந்தம்........

எப்படி?? என்றால்....எப்படியாவது.........

என்று சொந்தம் கொண்டாடினீர்கள்....

இன்று அவன் தனி மரம்....

உங்கள் வெளிநாட்டு போக வாழ்க்கைக்கு

அவன்தான் உரம்........
 
பாதிக்கப்பட்டோம் பாதிக்கப்பட்டோம்
என்று சொல்லிய எவரும் பாதிக்கப்படவில்லை.........
பாதிக்கப்பட்டவர்களுக்கு -அது
பாதிப்பாய் தெரியவில்லை.

பச்சை பச்சையாய் பொய் புளுகி வாழ
அவர்களுக்குப் பிரியமில்லை...
 
இவர்களின் பெயரைச் சொல்லி

நீங்கள் நிறையச் சாதித்தீர்கள்

பாவம்.............

உங்களால் இவர்கள்தான் பாதித்தார்கள்........
 
இவ்வளவும் வாசித்த பின்..........

"இவன் என்ன யோக்கியனா?"

என்று என்னைக் கேட்பீர்கள் ..

கேள்வி கேளுங்கள் ......

அது உங்கள் உரிமை .

மற்றவர்களை கேனயன் ஆக்காதீர்கள்,,,,

அது உங்கள் உரிமை அல்ல .....

இவ்வரிகள் அனைவருக்கும் பொதுவானவையும் அல்ல ....
 
இவ்வளவு நாட்களும் அவர்கள் உங்களுக்காக.........

வாழ்ந்தார்கள் இறந்தார்கள்

இனியாவது ................

அவர்களை அவர்களுக்காக வாழ விடுங்கள்........

அவர்களின் பாதி வாழ்க்கையாவது..........?????????
 

நிர்ப்பந்தத்தாலும் நியாயங்களாலும் புலம் பெயர்ந்த பற்றாளர்கள் என்றும் எம் தோழர்கள் ..........................................

-வளவன்.

No comments:

Post a Comment